விராட் விவகாரம் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது ‘No Comments’ என்று கூறி நழுவி சென்ற கங்குலி!
விராட் கோலியை தலைமையில் இருந்து நீக்கிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில், இது குறித்து பிசிசிஐயின் தலைமைகளில் ஒருவரான சவுரவ் கங்குலியிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்விகளை அடுக்கிஅ போது ‘No Comments’ என்று கூறி பதில் ஏதும் அளிக்காமல் நழுவி சென்று நடையைக் கட்டி இருக்கிறார் கங்குலி.
விராட்டை ஒரு நாள் போட்டி தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கியதற்கான காரணத்தை கங்குலி அவர்கள் பத்திரிக்கையாளர்களிடம் விளக்கிய போது, ‘டி20 உலக கோப்பைக்கு பிறகு டி20 கேப்டன்சிப்பில் இருந்து விலகுகிறேன் என்று விராட் கோலி கூறிய போது பிசிசிஐ-யில் இருந்து தற்போதைக்கு விலகாதீர்கள் என்று எவ்வளவோ கேட்டுக் கொண்டோம். அதை மீறி விராட் விலகி விட்டார், அணிக்கு இரட்டை தலைமை இருந்தா்ல் திட்டங்களை செயல்படுத்துவது கடினமாக இருக்கும் அதன் காரணமாகவே விராட் தலைமையிலிருந்து நீக்கப்பட்டு ரோஹிட் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு தலைமையாக அமர்த்தப்பட்டு இருக்கிறார்‘ என்று ஒரு விளக்கத்தை கொடுத்து இருந்தார்.
இந்த விளக்கம் வெளியாகிய சில நாட்களிலேயே விராட் கோலி தனது சார்பில் ஒரு விளக்கமும் பத்திரிக்கையாளர்களிடம் கொடுத்து இருந்தார். அதில் அவர் கூறியதாவது ‘பிசிசிஐ-யின் முடிவை ஏற்றுக் கொள்கிறேன். வருகின்ற தென் ஆப்பிரிக்க தொடரிலும் ரோஹிட் தலைமையில் நிச்சயம் விளையாடுவேன். எனக்கும் ரோஹிட்டுக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை. இதை தொடர்ந்து இரண்டு வருடமாக கூறி கூறி எனக்கே சலித்து போய் விட்டது. ஆனால் நான் டி20 உலககோப்பைக்கு பிறகு தலைமையில் இருந்து விலகிய போது என்னிடம் பிசிசிஐ வந்து வில்காதீர்கள் என்றெல்லாம் சொல்லவில்லை. உடனே ஏற்றுக் கொண்டனர்’ என்று கங்குலியின் கருத்துக்கு எதிர்கருத்தை தெரிவித்தார் விராட் கோலி.
“ வெளிப்படையாக எந்த கருத்தையும் பிசிசிஐ முன் வைக்காத வரை இது போன்ற விவகாரங்கள் நிச்சயம் தொடர்ந்து விஸ்வரூபம் எடுக்க தான் செய்யும் “