HBD MS Dhoni | ‘நீங்க என்ன வேணாலும் சொல்லிக்கோங்க அவர் என்னிக்கும் ராஜா தான்’
Happy Birthday MS Dhoni 07 07 2022
இந்திய அணியின் தலை சிறந்த கேப்டனாக அறியப்படும் மகேந்திர சிங் தோனி அவர்களுக்கு இன்று பிறந்த நாள்.
உலகிலேயே தன் நாட்டிலேயே அதிக வெறுப்பாளர்களையும் கொண்டிருக்கும் ஒரு கிரிக்கெட் வீரர் என்றால் அது தோனி என்று சொல்லலாம். இதுவரை உலகளாவிய அளவில் 16 கேப்டன்கள் 3 ஐசிசி டூர்னாமென்ட்களுக்கும் தலைமை ஏற்று அவர்கள் அணியை வழிநடத்தி இருக்கின்றனர். அந்த 16 தலைமைகளுள் ஒரே ஒரு தலைமை மட்டுமே 3 ஐசிசி ட்ராபிகளையும் கைப்பற்றி இருக்கிறது. அந்த தலைமை தான் தோனி. பிறந்த நாள் வாழ்த்துக்கள் மகேந்திர சிங் தோனி.
“ நீங்க என்ன வேணாலும் சொல்லிக்கோங்க தலைவன் என்றும் தலைவன் தான், ராஜன் என்றும் ராஜா தான் “