யார்க்கர் அரக்கன் லசித் மலிங்கா பிறந்த தினம் இன்று!

ஒரு ஓவரில், ஒரு யார்க்கர் என்பதே பவுலர்களுக்கு வரமாகிப்போகும். ஆனால் இவரோ நினைத்த நேரத்தில் எல்லாம் யார்க்கரை வீசி பேட்ஸ்மேன்களை நிலைகுலைய செய்வார். சுருட்டை முடி, சிங்க வேகம், கையில் பந்தை வாங்கிக்கொண்டு முத்தமிட்டு ஓடி வந்து இவர் எறிகின்ற யார்க்கர்களில் ஸ்டம்புகள் சிதறும். ஆம் அவர் தான் யார்க்கர் மன்னன் லசித் மலிங்கா. இன்று அவரின் பிறந்த தினம்.

இலங்கைக்கு சமிந்தா வாஸ் அவர்களின் ஓய்விக்கு பிறகு அவரின் வெற்றிடத்தை நிரப்ப ஒரு மிகப்பெரிய பவுலரின் இடம் தேவைப்பட்டது. ஆனால் அந்த இடத்தை லசித் மலிங்கா எளிதாக நிரப்பி விட்டார் என்றே சொல்ல முடியும். 226 ஒரு நாள் போட்டிகள் விளையாட்டு போட்டிகள் ஆடியிருக்கும் லசித் மலிங்கா அதில் 8 முறை ஐந்து விக்கெட்டுக்கள் உட்பட மொத்தமாய் 338 விக்கெட்டுக்களை எடுத்துள்ளார். பேட்ஸ்மேன்களில் பினிஷர்கள் பார்த்திருப்பீர்கள் ஆனால் பவுலர்களில் பினிஷர்கள் பார்த்ததுண்டா. ஆம் லசித் மலிங்கா பவுலர்களில் பினிஷர் வகையை சார்ந்தவர்.

அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்வைச்சொல்லலாம், 2007 உலக கோப்பை, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இலங்கை, தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக 210 ரன்கள் இலக்கை நிர்ணயிக்கிறது. அதற்கு அடுத்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி எளிதாகவே இலக்கை நோக்கி சென்றது. 5 விக்கெட்டுகளை கைஇருப்பு வைத்துக்கொண்டிருந்த தென்னாப்பிரிக்க அணிக்கு 32 பந்துகளில் வெறும் 4 ரன்களே தேவைப்பட்டது. அந்த நிலையில் தான் 45 ஆவது ஓவரை வீச வந்தார் லசித் மலிங்கா, 45 ஆவது ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட், அதற்கு பின் 47 ஆவது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட் என்று தொடர்ந்து நான்கு விக்கெட் எடுத்து தென் ஆப்பிரிக்காவின் வெற்றி பெறும் எண்ணத்தை நிலை குலைய செய்தார்.

தோனி எப்படி உலகளாவிய அளவில் பேட்ஸ்மேன்களில் ’பெஸ்ட் பினிஷர்’ என்று அறியப்படுகிறாரோ அது போல லசித் மலிங்காவை உலகளாவிய அளவில் பவுலர்களில் ‘பெஸ்ட் பினிஷர்’ என்று சொல்லி விடலாம். இலங்கை கிரிக்கெட்டிலிருந்து எப்போதோ மலிங்கா ஓய்வு பெற்றிருந்தாலும் இன்றளவும் அவர் இடத்தை நிரப்பும் அளவுக்கு அணியில் ஒரு சிறந்த பவுலர் அவரின் அளவுக்கு கிடைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். ஆங்கிலத்தில் Goat என்று சொல்வார்களே ஆம் அது தான் லசித் மலிங்கா.

“ லசித் மலிங்காவிடம் பிடித்தது தோனிக்கு ஒரு சமயம் யார்க்கர் இடுவார். அதை தோனியோ ஹெலிகாப்டர் சாட் ஆக கன்வர்ட் செய்து விண்ணுக்கு பறக்க விடுவார். மற்ற பவுலர்களாக இருந்தார் முகத்தில் பாவம் அல்லது முறைப்பு வெளிப்பட்டிருக்கும். ஆனால் லசித் மலிங்காவோ அதை ரசித்து தோனியின் முகத்தைப்பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார். இதை அவர் தொடர்ந்து செய்வார். ஆம் அந்த யார்க்கர் மன்னன் உலகத்தையே அவன் பாணியில் ரசிக்க வைத்து விடுவான். வாழ்க வளமுடன் லசித் மலிங்கா “

About Author