நீயும் வா சேர்ந்து போட்டோ எடுத்துக்கலாம், நெகிழ வைத்த நீராஜ் சோப்ரா!
Hungary Athletics Worlds Gold Winner Neeraj Call Pakistani Player For Pose Idamporul
ஹங்கேரி உலக ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற நீராஜ், வெள்ளி வென்ற பாகிஸ்தான் வீரரையும் அழைத்து போட்டோ எடுத்துக் கொண்டது நெகிழ வைத்து இருக்கிறது.
ஹங்கேரி உலக ஈட்டி எறிதல் போட்டியில் 88.17 மீ தூரம் எறிந்து நீராஜ் தங்கம் வென்றார். பாகிஸ்தான் வீரர் நதீம் அதற்கு அடுத்தபடியாக 87.82 மீ தூரம் எறிந்து வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார். பதக்க நிகழ்வின் போது நீராஜ், பாகிஸ்தான் வீரர் நதீமையும் அழைத்து போட்டோ எடுத்துக் கொண்டது இரு நாட்டு ரசிகர்களையும் நெகிழ வைத்து இருக்கிறது.
” இந்தியாவில் கூட வீரர்களுக்கு பயிற்சிக்கு நல்ல வசதிகள் இருக்கும், ஆனால் எந்த வசதியும் இல்லாமல் இந்த நிலையை அடைந்து இருக்கும் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் அவர்களுக்கு இந்திய ரசிகர்களும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர் “