மீண்டும் ஒரு நாள் போட்டிக்கான ஐசிசி தர வரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்தார் பும்ரா!
Bumrah Again Ranked As No 1 In ODI Format
ஒரு நாள் போட்டிக்கான ரேங்கிங்கில் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்து இருக்கிறார் ஜஸ்ப்ரீட் பும்ரா.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில், 7.2 ஓவர்கள் வீசி 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஆறு விக்கெட்டுக்களை கைப்பற்றியதன் மூலம், பும்ரா ஐசிசி தரவரிசையில் 718 புள்ளிகளுடன் மீண்டும் முதல் இடத்தை தன்வசப்படுத்தி இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக போல்ட் 2 ஆம் இடம் வகிக்கிறார்.
“ இன்று இரண்டாவது ஒரு நாள் போட்டி துவங்க இருக்கும் நிலையில் இன்றும் தனது மேஜிக்கை காட்டுவாரா பும்ரா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “