ஐசிசி டி20 உலக கோப்பையின் பதினைந்தாவது போட்டியில் வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தியது இலங்கை அணி.
முதலில் ஆடிய வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுக்களை இழந்து 172 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய இலங்கை அணி அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுக்களை இழந்த போதும் மறுபுறம் சரித் அசலங்காவின் அதிரடி ஆட்டத்தால் 18.5 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக துரத்திப் பிடித்தது.
அதிரடி காட்டிய சரித் அசலங்கா ஐந்து போர்கள் மற்றும் ஐந்து சிக்சர்களுடன் 80(49) ரன்கள் விளாசினார். பானுகா ராஜபக்சாவும் தனது பங்குக்கு 53(31) ரன்கள் எடுத்து இலங்கையின் வெற்றிக்கு வித்திட்டார்.
“ புலிக்குட்டிகளின் நாகினி ஆட்டத்தை அடக்கி தனது சூப்பர் 12-யின் முதல் ஆட்டத்தில் எளிதாக வென்று இருக்கிறது இலங்கை அணி “