ICC T20 WC 2021 | பறிபோனது இந்தியாவின் 13-0 ஸ்ட்ரீக்!
டி20 உலககோப்பையின் பதினாறாவது போட்டியில் இந்திய அணியை அதிரடியாக தோற்கடித்து இருக்கிறது பாகிஸ்தான்.
முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் கோலி 57(49) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய பாகிஸ்தான் அணி, ஒரு விக்கெட்டுக்களை கூட இழக்காமல் 17.5 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக துரத்திப் பிடித்தது.
பாகிஸ்தான் அணி சார்பில் முகமது ரிஸ்வான் 79(55) ரன்களும், பாபர் ஆஸம் 68(52) ரன்களும் எடுத்து ஒரு விக்கெட்டுக்களை கூட பறி கொடுக்காமல் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவின் 13-0 என்றிருந்த ஸ்ட்ரீக்கை இந்த இளம் பாகிஸ்தான் அணி இந்த வெற்றியின் மூலம் உடைத்து எறிந்திருக்கிறது.
“ தங்கள் நாட்டுக்கு வந்து விளையாடாமல் தொடரை ரத்து செய்த நியூசிலாந்து அணிக்கும், தங்கள் நாட்டிற்கு இடையேயான தொடரை ரத்து செய்த இங்கிலாந்து அணிக்கும் இந்த வெற்றியின் மூலம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது பாகிஸ்தான் அணி “