ICC T20 WC 2021 | இன்றைய இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா!
![IND VS PAK ICC T20 World Cup 16th Match Preview](https://i0.wp.com/idamporul.com/wp-content/uploads/2021/10/IND-VS-PAK-ICC-T20-World-Cup-16th-Match-Preview.jpeg?fit=640%2C403&ssl=1)
IND VS PAK ICC T20 World Cup 16th Match Preview
இன்று நடக்கும் ஐசிசி டி20 உலககோப்பையின் பதினாறாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது இந்தியா.
டி20 உலககோப்பையின் இன்றைய இரண்டாவது போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, பாபர் ஆஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.
இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய எட்டு டி20 போட்டிகளில் ஏழு போட்டிகளில் இந்திய அணியே வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே பரபரப்பு பற்றிக்கொள்ளும். நீண்ட காலத்திற்கு பிறகு இரண்டு பங்காளிகள் மோதிக் கொள்ள இருப்பதால் எதிர்பார்ப்பும் உச்சத்தை எட்டி இருக்கிறது.
“ கிரிக்கெட் பார்க்க தொடர்ந்தது முதலே இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் என்றால் ஒரு பால் கூட விட்டு வைக்காமல் டிவியை பார்ப்பதுண்டு. இன்றும் எத்தனை டிவிகள் உடைகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் “