ICC T20 WC 2021 | மேற்கிந்திய தீவுகளை எளிதாக வென்றது தென் ஆப்பிரிக்கா!
ICC T20 WC 2021 18th Match South Africa Win Against West Indies
ஐசிசி டி20 உலக கோப்பை 2021-இன் 18 ஆவது போட்டியில் மேற்கிந்திய தீவுகளை எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்க அணி.
முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. மேற்கிந்திய தீவுகல் சார்பில் லீவிஸ் மட்டுமே 56(35) ரன்கள் எடுத்து ஜொலித்தார். அதற்கு பின் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 18.2 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக துரத்திப் பிடித்தது.
தென் ஆப்பிரிக்க அணி சார்பில் நான்கு சிக்ஸ்கள், இரண்டு போர்களுடன் எய்டன் மார்கரம் 51(26) ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு அடித்தூண் இட்டார். பவர்புல் பேட்டர்களை அணியில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு முறையும் பேட்டிங்கில் சொதப்பி வருகிறது மேற்கிந்திய தீவுகள் அணி. இனி வரும் போட்டிகளிலாவது மேற்கிந்திய தீவுகள் அணி தனது பாணியில் ஆடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
“ பவர் ஹிட்டிங், அடிக்கும் பால் அனைத்தும் அண்ணாந்து பார்க்கும் சிக்ஸ்கள் என்று இருந்த மேற்கிந்திய தீவுகள் அணியே அனைவரும் எதிர்பார்க்கும் அணி. மீண்டு(ம்) வாருங்கள் “