ICC T20 WC 2021 | நியூசிலாந்து அணியை பழி தீர்த்தது பாகிஸ்தான்!
ஐசிசி டி20 உலககோப்பை பத்தொன்பதாவது போட்டியில் நியூசிலாந்து அணியை வென்று இருக்கிறது பாகிஸ்தான் அணி.
முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதற்கு பின் ஆடிய பாகிஸ்தான் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எளிதாக துரத்தி பிடித்தது. இந்த வெற்றியின் மூலம் தனது நாட்டிற்கு வந்து விளையாடாமல் சென்ற நியூசிலாந்து அணியை பழி தீர்த்திருக்கிறது பாகிஸ்தான்.
பாகிஸ்தான் சார்பில் ஹரிஷ் ராஃப் நான்கு ஓவர்கள் வீசி 22 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுக்களை கைப்பற்றி நியூசிலாந்து அணியை பெரிய டார்கெட்டுக்கு செல்ல விடாமல் நிலை குலையச் செய்தார். இதுவே பாகிஸ்தானின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது.
“ உலக கோப்பையின் தொடக்கத்திலேயே தன் ஆதிக்கத்தை காட்டி இருக்கிறது பாகிஸ்தான் அணி, தனது இரண்டு தொடர் வெற்றிகளுமே இந்தியா நியூசிலாந்து போன்ற பெரிய அணிகளை தோற்கடித்து வந்தது என்பதால் இன்னமும் பெரும் தைரியத்துடன் அடுத்தடுத்த சுற்றுகளை நோக்கி நகரும் பாகிஸ்தான் என்பதி ஐயமில்லை “