ICC T20 WC 2021 | ஸ்காட்லாந்து அணியை வென்று சூப்பர் 12-யில் தனது முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது நமீபியா அணி!
ICC T20 WC 2021 21th Match Namibia Win Against Scotland
ஐசிசி டி20 உலககோப்பையின் இருபத்தி ஒன்றாவது போட்டியில் ஸ்காட்லாந்து அணியை அதிரடியாக வென்று, சூப்பர் 12-யின் தனது முதல் போட்டியிலேயே வெற்றியோடு துவங்கி இறங்கி இருக்கிறது நமீபியா அணி!
முதலில் ஆடிய ஸ்காட்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 109 ரன்கள் எடுத்தது. ஸ்காட்லாந்து சார்பாக லீஸ்க் 44(27) தவிர யாரும் பெரிதாய் சோபிக்கவில்லை. அதற்கு பின் ஆடிய நமீபியா அணி 19.1 ஓவர்களில் இலக்கை எளிதாக துரத்திப் பிடித்து சூப்பர் 12 சுற்றில் தனது முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
நமீபியா சார்பில் ஒரு பக்கம் தொடர்ந்து விக்கெட்டுக்கள் சரிந்து கொண்டிருந்த போதும், ஜே.ஜே.ஸ்மித் நிலைத்து நின்று ஆடி 23 பந்துகளில் 32 ரன்கள் எடுத்துக் கொடுத்து கடைசி ஓவரில் ஒரு ரன் தேவைப்பட்ட போது மகேந்திர சிங் தோனி போல ஒரு சிக்ஸ்சை பறக்க விட்டு அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார்.
“ தொடர்ச்சியாக இரு தோல்வியைச் சந்தித்து இருக்கிறது ஸ்காட்லாந்து அணி, தான் ஆடிய சூப்பர் 12-யின் முதல் போட்டியிலேயே முதல் வெற்றியை ருசித்திருக்கிறது எராஸ்மஸ் தலைமையிலான நமீபியா அணி “