ICC T20 WC 2021 | இன்றைய முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்கிறது வங்கதேசம்!
ICC T20 WC 2021 23th Match Westindies VS Bangladesh Preview
ஐசிசி டி20 உலககோப்பையின் இருபத்து மூன்றாவது போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்ள இருக்கிறது வங்க தேசம் அணி.
இன்றைய டி20 உலககோப்பையின் முதல் போட்டியில் மகமதுல்லா தலைமையிலான பங்களாதேஷ் அணி, பொல்லார்டு தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர் கொள்ள இருக்கிறது. ஷார்ஜா மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது இந்திய நேரப்படி 3:30 மணிக்கு ஒளிபரப்பாகும்.
இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 11 போட்டிகளில் ஆறு போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியும், 5 போட்டிகளில் வங்கதேசம் அணியும் வென்றிருக்கிறது. தொடர்ந்து இரு அணிகளுமே சூப்பர் 12 பிரிவில் இரண்டு தோல்விகளை சந்தித்து இருக்கின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்று யார் வெற்றிக் கணக்கை தொடர்கிறார் என்று பார்ப்போம்.
” அதிரடி ஆட்டத்துக்கு பெயர் போன மேற்கிந்திய தீவுகள் அணி கடந்த இரு போட்டிகளிலுமே புஷ்வானம் ஆட்டம் தான் ஆடியது. இந்த போட்டியிலாவது அணுகுண்டாய் வெடிக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “