ICC T20 WC 2021 | ஆசிப் அலியின் அதிரடியில் ஆப்கானிஸ்தானை வென்றது பாகிஸ்தான்!

ஐசிசி டி20 உலககோப்பையின் இருபத்து நான்காவது போட்டியில் ஆப்கானிஸ்தானை அதிரடியாக வென்றது பாகிஸ்தான் அணி.

முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய பாகிஸ்தான் அணி ஐந்து விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய போதும், ஆசிப் அலியின் அதிரடியால் 19 ஓவர்களிலேயே இலக்கை துரத்திப் பிடித்து, தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.

கடைசி இரண்டு ஓவர்களில் பாகிஸ்தானின் வெற்றிக்கு தேவைப்பட்டது 24 ரன்கள். 19-ஆவது ஓவரை ஆப்கானிஸ்தான் பவுலர் கரீம் ஜனட் வீச வந்தார். களத்தில் நின்ற ஆசிப் அலியின் முகத்தில் சிறிதும் பதற்றம் இல்லை. அந்த ஓவரிலேயே நான்கு சிக்சர்களை நாலா பக்கமும் பறக்கவிட்டு மேட்சை முடித்து விட்டார்.

“ சூப்பர் 12 குரூப் 2 பிரிவில் தொடர்ந்து 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது பாகிஸ்தான் அணி. ஒரு வேளை இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று இருந்தால் இந்தியாவின் செமி பைனல் வாய்ப்பு சற்றே குறைந்திருக்கும் “

About Author