ICC T20 WC 2021 | 25TH MATCH | இலங்கையை வென்றது தென் ஆப்பிரிக்கா!

ICC T20 WC 2021 25th Match South Africa Win Against Sri Lanka

ICC T20 WC 2021 25th Match South Africa Win Against Sri Lanka

ஐசிசி டி20 உலககோப்பையின் இருபத்து ஐந்தாவது போட்டியில் இலங்கையை வென்று சூப்பர் 12 குரூப் 1 பிரிவில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது தென் ஆப்பிரிக்கா.

முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை சார்பில் நிஷாங்கா 72(58) தவிர யாரும் பெரிதாய் ஜொலிக்கவில்லை. அதன் பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 19.5 ஓவர்களில் இலக்கை எளிதாக துரத்திப் பிடித்து தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

தென் ஆப்பிரிக்க அணிக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட போது, லகிரு குமாரா அந்த ஓவரை வீசினார். முதல் பந்தை ரபாடா சந்தித்து ஒரு ரன்கள் எடுத்து மில்லருக்கு வழி விட்டார். அடுத்த இரண்டு பந்துகளில் இரண்டு தொடர் சிக்ஸ்சர்களை பறக்க விட்டு மில்லர் பவுலருக்கு கிலியூட்டினார். அதற்கு பின் ஒரு ரன்கள், அதற்கு பின் ரபாடாவின் போர் என்று போட்டி முடிவுக்கு வந்தது.

“ இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி, சூப்பர் 12 குரூப் 1 பிரிவில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது, இலங்கை அணிக்கு இது இரண்டாவது தோல்வி “

About Author