ICC T20 WC 2021 | 26TH MATCH | ஜோஸ் பட்லரின் அதிரடியில் அரண்டு போன ஆஸ்திரேலியா!
ஐசிசி டி20 உலககோப்பையின் இருபத்து ஆறாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியை அதிரடியாக வீழ்த்தியது இங்கிலாந்து அணி.
முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வெறும் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் பின்ச் 44(49) தவிர யாரும் பெரிதாய் சோபிக்கவில்லை. அதற்கு பின் ஆடிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டி 11.4 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக துரத்திப் பிடித்தது.
இங்கிலாந்து அணி சார்பில் ஜோஸ் பட்லர், ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பவுலர்களின் பந்து வீச்சை ஈவு இரக்கம் காட்டாமல் நாலா பக்கமும் சிதறடித்து ஐந்து போர்கள் மற்றும் ஐந்து சிக்ஸ்சர்களுடன், 71(32) ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய அடித்தூண் இட்டார். மூன்று போட்டிகளில் மூன்று வெற்றிகளுடன் குரூப் 1 பிரிவில் முதல் இடத்தில் ராஜாவாய் அமர்ந்திருக்கிறது மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி.
“ இந்தியா-பாகிஸ்தான் எப்படி பங்காளிகளோ, அதே அளவுக்கு இங்கிலாந்து-ஆஸ்திரேலியாவும் ஒன்னு விட்ட பங்காளிகள் மாற்றி மாற்றி இருவரும் அடித்து துவைத்துக் கொள்வர். அந்த வகையில் இன்று பெரிய அடி ஆஸ்திரேலியாவிற்கே “