ICC T20 WC 2021 | 27TH MATCH | நமீபியாவை எளிதாக வென்றது ஆப்கானிஸ்தான்!
ICC T20 WC 2021 27th Match Afghanistan Win Against Namibia
ஐசிசி டி20 உலககோப்பையின் இருபத்து ஏழாவது போட்டியில் நமீபியாவை எளிதாக வென்று தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து இருக்கிறது
முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் முகமது ஷேக்சாத் 45(33) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய நமீபியா அணியால் 20 ஒவர்களில் 98 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
ஆப்கானிஸ்தான் சார்பில் நவீன் உல் ஹக், ஹமீது ஹாசன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றினர். சூப்பர் 12, குரூப் 2 பிரிவில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்திருக்கும் ஆப்கானிஸ்தான் புள்ளிப்பட்டியலில் தற்போது இரண்டாவது இடத்தை பெற்றிருக்கிறது.
“ ஒரு பக்கம் பாகிஸ்தான் மூன்று போட்டிகளில் மூன்று வெற்றி, இன்னொரு பக்கம் ஆப்கானிஸ்தான் மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றி என்று இரு அணிகளும் டாப் ஸ்பாட்களை பிடித்து கொண்டு இந்தியாவிற்கும், நியூசிலாந்திற்கும் அரையிறுதி வாய்ப்பினை கடினமாக்கி கொண்டு வருகின்றன “