ICC T20 WC 2021 | 28TH MATCH | ‘DO OR DIE’ போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்தியா!
ICC T20 WC 2021 28th Match India VS NewZealand Preview
ஐசிசி டி20 உலக கோப்பையின் இன்று நடக்கும் இருபத்து எட்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி.
இன்று நடக்கும் டி20 உலக கோப்பை போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, கோலி தலைமையிலான இந்திய அணியை எதிர்கொள்கிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது இந்திய நேரப்படி 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.
இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 16 போட்டிகளில் 8 போட்டிகளில் இந்திய அணியும், 8 போட்டிகளில் நியூசிலாந்து அணியும் வென்றிருக்கின்றன. இந்திய அணி கடைசியாக நியூசிலாந்து அணிக்கு எதிராக ஐசிசி போட்டிகளில் வென்று 18 வருடங்கள் ஆகிறது. 2003, 50 ஓவர் உலக கோப்பையின் போது கங்குலி தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்தை வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
“ இன்று நடக்கும் போட்டியில் வெற்றி பெற்று 18 வருட தோல்விக்கு முடிவு கட்டுவாரா கோலி என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் “