ICC T20 WC 2021 | 42TH MATCH | இன்றைய போட்டியில் நமீபியாவை எதிர்கொள்கிறது இந்திய அணி!

ICC T20 WC 2021 42th Match India VS Namibia Preview

ICC T20 WC 2021 42th Match India VS Namibia Preview

ஐசிசி டி20 உலக கோப்பையின் நாற்பத்து இரண்டாவது போட்டியில் நமீபியா அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி.

டி20 உலககோப்பையின் இன்றைய போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, எராஸ்மஸ் தலைமையிலான நமீபியா அணியை எதிர்கொள்கிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி எளிதாக வென்றுவிட்ட நிலையில், இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு முழுவதுமாக பறிபோய்விட்டது. நமீபியாவுக்கு எதிரான இந்த போட்டியின் மூலம் எதுவும் மாறிவிடாது என்ற நிலையில் இலகுவான மனநிலையுடன் களம் இறங்குகிறது நம் இந்திய அணி.

India Probable XI: Rohit Sharma, KL Rahul, Suryakumar Yadav/Ishan Kishan, Virat Kohli (c), Rishabh Pant (wk), Hardik Pandya, Ravindra Jadeja, Ravichandran Ashwin, Varun Chakravarthy/Rahul Chahar, Jasprit Bumrah, Mohammed Shami/Bhuvneshwar Kumar

Namibia Probable XI: Stephen Baard, Michael van Lingen, Craig Williams, Gerhard Erasmus (c), David Wiese, JJ Smit, Jan Nicol Loftie-Eaton, Ruben Trumpelmann, Zane Green (wk), Jan Frylinck, Bernard Scholtz

“ முக்கியமான போட்டிகளில் உலகின் பலம்வாய்ந்த அணியாக கருதப்படும் இந்திய அணி தொடர்ந்து சொதப்பி வருவது வாடிக்கையாகி வருகிறது. மீண்டு வரும் நம்பிக்கை கொள்வோம் “

About Author