ICC T20 WC 2021 | 42TH MATCH | நமீபியாவை எளிதாக வென்றது இந்திய அணி!
ICC T20 WC 2021 42th Match India Win Against Namibia
ஐசிசி டி20 உலக கோப்பையின் நாற்பத்து இரண்டாவது போட்டியில் நமீபியாவை எளிதாக வென்றது இந்திய அணி!
முதலில் ஆடிய நமீபியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு வெறும் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணியின் ரோஹிட் சர்மா மற்றும்
கே எல் ராகுலின் அபார அரை சதத்தால், 15.2 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக துரத்திப் பிடித்து வெற்றி கண்டது.
இந்திய அணி சார்பில் கே எல் ராகுல் 54(36) ரன்களும், ரோஹிட் சர்மா 56(37) ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். அபாரமாக பந்து வீசி நான்கு ஓவர்களில் வெறும் 16 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய ரவீந்திர ஜடேஜா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
“ வெளியேறுவதற்கு முன் ஒரு வெற்றி. அவ்வளவு தான், பெரிதாக கொண்டாட ஏதும் இல்லை எனினும் விராட் தலைமையில் இந்திய அணியின் கடைசி வெற்றி என்பதையாவது கொண்டாடுவோம் “