ICC T20 WC 2021 | SEMI FINAL 1 | இங்கிலாந்து அணியை அதிரடியாக வென்றது நியூசிலாந்து அணி!
ICC T20 WC 2021 Semi Final 1 NewZealand Win Against England
ஐசிசி டி20 உலக கோப்பையின் முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை அதிரடியாக வென்றது நியூசிலாந்து அணி.
முதலில் ஆடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் களம் இறங்கிய நியூசிலாந்து அணி குப்தில், வில்லியம்சன் என்று இரண்டு முக்கியமான விக்கெட்டுக்களை தொடர்ந்து இழந்த போதும், அதற்கு பின் சுதாரித்து ஆடி 19 ஓவர்களில் இலக்கை எட்டியது.
இங்கிலாந்து அணி சார்பில் மொயீன் அலி 51(37) ரன்கள் அணிக்காக எடுத்துக் கொடுத்தார். நியூசிலாந்து அணி சார்பில் டேர்லி மிட்சல் 47 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்று நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு பெரிதும் பங்காற்றினார்.
“ 2019 ஒரு நாள் உலககோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து தோற்று இருந்தது. அதற்கு பழிவாங்கும் விதமாக இன்றைய அரையிறுதியில் அதிரடியாக விளையாடி இங்கிலாந்தை வெளியில் தள்ளி இருக்கிறது நியூசிலாந்து அணி “