ICC T20 WC 2021 | SEMIFINAL 1 | இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து!
ஐசிசி டி20 உலககோப்பையின் முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி.
இன்றைய முதல் அரையிறுதி போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. அபுதாபி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.
இதுவரை நேருக்கு நேர் மோதிய 21 டி20 போட்டிகளில் 13-இல் இங்கிலாந்து அணியே வென்று முன்னிலை வகிக்கிறது. நியூசிலாந்து அணியின் சிவசாமியாக கருதப்படும் வில்லியம்சன் எந்த போட்டியிலும் எதிரணியினருக்கு வெற்றியை அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுப்பதில்லை. ஆக மொத்தத்தில் ஒரு நெருப்பு களமாக இந்த போட்டி இருக்கும்.
England Possible XI:Jos Buttler (wk), Jonny Bairstow, Dawid Malan, Moeen Ali, Eoin Morgan (c), Sam Billings, Liam Livingstone, Chris Woakes, Chris Jordan, Mark Wood, Adil Rashid
New Zealand Possible XI: Martin Guptill, Daryl Mitchell, Kane Williamson (c), Devon Conway (wk), Glenn Phillips, James Neesham, Mitchell Santner, Adam Milne Tim Southee, Ish Sodhi, Trent Boult
” நூழிலையில் இங்கிலாந்து அணியிடம் ஒருநாள் போட்டிக்கான உலககோப்பையை தவற விட்ட இதே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, இந்த போட்டியில் அதற்காக பழி தீர்க்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “