ICC T20 WC 2021 | இன்றைய முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர் கொள்கிறது இலங்கை!

ICC T20 WC 2021 15th Match SriLanka Win Against BanglaDesh

ICC T20 WC 2021 15th Match SriLanka Win Against BanglaDesh

ஐசிசி டி20 உலககோப்பையின் 15-ஆவது போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்ள இருக்கிறது இலங்கை அணி.

இன்றைய முதல் போட்டியில் மகமுதுல்லா தலைமையிலான வங்க தேசம் அணி, தசூன் சணக்கா தலைமையிலான இலங்கை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது இந்திய நேரப்படி மாலை 3:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 11 போட்டிகளில், ஏழு போட்டிகளில் இலங்கை அணியும், நான்கு போட்டிகளில் வங்க தேசம் அணியும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு பக்கம் மகமுதுல்லாவும், முஸ்பிகுர் ரஹீமும் இலங்கைக்கு எதிராக 34-ற்கு மேல் சராசரியுடன் 145 ஸ்ட்ரைக் ரேட் வைத்து இருக்கின்றனர். இன்னொரு பக்கம் ஹசரங்காவின் சுழல் பயமுறுத்திக் கொண்டு இருக்கிறது. ஆக மொத்தம் களம் ஒரு அதிரடி களம் தான்.

Sri Lanka Probable XI: Pathum Nissanka, Kusal Perera (wk), Charith Asalanka, Avishka Fernando, Bhanuka Rajapaksa, Dasun Shanaka (c), Wanindu Hasaranga, Chamika Karunaratne, Dushmantha Chameera, Maheesh Theekshana/Akila Dananjaya, Lahiru Kumara

Bangladesh Probable XI: Mohammad Naim, Liton Das, Mahedi Hasan, Shakib Al Hasan, Nurul Hasan (wk), Afif Hossain, Mahmudullah (c), Mushfiqur Rahim, Mohammad Saifuddin, Taskin Ahmed, Mustafizur Rahman

“ இன்று நடக்கவிருக்கும் இரண்டு போட்டிகளுமே அதிரடியான போட்டிகள் தான், நடக்கும் எல்லா போட்டிகளும் குறைந்த ஸ்கோர் மேட்சாகவே அமைவதால் விறுவிறுப்பு குறைகிறது, இந்த இரண்டு போட்டிகளும் சரிந்து கிடக்கும் அந்த விறு விறுப்பை தூக்கி பிடிக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் “

About Author