ICC T20 WC 2022 | Semifinal 2 | ‘ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து, தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா’
ICC T20 WC 2022 Semifinal 2 IND vs ENG Engalnd Team Won By 10 Wickets
ஐசிசி டி20 உலககோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து மிரள வைத்து இருக்கிறது.
சில தினங்களாக தென் ஆப்பிரிக்காவையும், நியூசிலாந்து அணியையும் இந்திய ரசிகர்கள் ஜோக்கர்ஸ் என்று கலாய்த்து வந்தனர். ஆனால் இந்திய அணியோ நாங்கள் தான் ஜோக்கர்ஸ் என்று நாக் அவுட் சுற்றில் மீண்டும் நிரூபித்து இருக்கிறது. 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்று உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேற்றி இருக்கிறது இங்கிலாந்து.
“ ஜோஸ் பட்லரும் 80(49), அலெக்ஸ் ஹேல்ஸ்சும் 86(47) நாலாபுறமும் பவுண்டரிகளை பறக்க விட்டு இது எல்லாம் (168-6) என்ன ஸ்கோர் என்பது போலவே விளையாடி 16 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, இந்திய அணியை நிலைகுலைய வைத்தனர். இந்திய அணிக்கு சரித்திரத்தில் நிச்சயம் இது மறக்க முடியாத தோல்வியாக அமையும் “