ICC T20 WC 2024 | IND vs PAK | ‘6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா திரில்லர் வெற்றி’
ஐசிசி டி20 உலககோப்பையின் பத்தொன்பதாவது போட்டியில், இந்தியா பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில்லர் வெற்றியை ருசித்து இருக்கிறது.
பொதுவாகவே நியூயார்க் ஆடுகளம் கொஞ்சம் கரடு முரடான ஆடுகளமாகவே அறியப்படுகிறது. பேட்ஸ்மேன்களுக்கு பெரிதாக சாதகமாக இல்லை. எதிர்பார்க்காத பவுன்சர்கள், எதிர்பார்க்காமல் பந்து லோ ஆகுவது என பவுலர்களாலேயே தங்களது பந்து வீச்சை கணிக்க முடியவில்லை. இந்த நிலையில் தான் பாகிஸ்தான் நேற்றைய போட்டியில் இந்தியாவை எதிர்கொண்டது.
ஆரம்பத்திலேயே கணிக்கப்பட்டது, ஒரு 140 ரன்களே இந்த ஆடுகளத்திற்கு போதுமானது என்று, ஆனால் முதலில் பேட் செய்த இந்திய அணி 119 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது. ஆதலால் போட்டி பாகிஸ்தானுக்கு தான் சாதகம் என அறியப்பட்டது. இதற்கு முன்னர் ஜிம்பாவே அணியை 139 ரன்களுக்குள் சுருட்டியது தான் இந்தியாவின் குறைந்தபட்ச டிபெண்டிங் சாதனை.
கிட்டதட்ட ஒரு பத்து ஓவர் வரை ஆட்டம் பாகிஸ்தானுக்கு சாதகமாக தான் சென்று கொண்டு இருந்தது. இந்தியாவின் நம்பிக்கையாக அறியப்பட்ட பும்ரா களத்தில் தனது முழு பலத்தை காட்ட, பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அப்படியே வரிசையாக விக்கெட்டுக்களை பறி கொடுக்க ஆரம்பித்தனர். பும்ரா – ஹர்திக் கூட்டணி பாகிஸ்தானின் 5 விக்கெட்டுக்களை சரிக்க அப்புறம் என்ன இரண்டாவது பாதியில் ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. இறுதியாக 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா திரில்லர் வெற்றி பெற்றது.
“ சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி, இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஜஸ்ப்ரீட் பும்ரா ஆட்டநாயகன் ஆக தேர்ந்து எடுக்கப்பட்டார் “