ICC T20 WC | ‘அமெரிக்காவுடன் தோற்றதால் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்ட பாகிஸ்தான் அணி’
பாகிஸ்தான் அணி லீக் சுற்றில் அமெரிக்காவுடன் தோல்வி கண்டதால் ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடத்தை பெறும் அணிகள் தான் சூப்பர் 8 குழுவிற்கு தகுதி பெறும் நிலையில் ஏற்கனவே அமெரிக்கா இரண்டு வெற்றிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது என்னும் போது நாளை நடக்கும் லீக் போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவுடன் தோற்றுவிட்டால், பாகிஸ்தான் அணிக்கு அது இரண்டாவது தோல்வியாக அமையும், அதுமட்டும் அல்லாமல் கிட்டதட்ட லீக் போட்டியுடன் வெளியேறும் நிலையும் பாகிஸ்தானுக்கு வந்து விடும்.
அவ்வாறு லீக் சுற்றுடன் பாகிஸ்தான் வெளியேறும் பட்சத்தில் 2026 யில் நடைபெறும் டி20 உலககோப்பையில் குவாலிபையர் ஆடி அதில் தகுதி பெற்றால் மட்டுமே, லீக் சுற்று ஆட பாகிஸ்தான் அணி அனுமதிக்கப்படும் நிலை வரும் என கூறப்படுகிறது. ஒரு சர்வதேச அணியாக பார்க்கப்படும் பாகிஸ்தான் அணியின் இந்த நிலை குறித்து பாகிஸ்தான் ரசிகர்கள் இணையத்தில் புலம்பி வருகின்றனர்.
“ அமெரிக்காவை குறைவாக மதிப்பிட்டதன் விளைவு தான் பாகிஸ்தான் இந்த நிலைக்கு தள்ளப்பட்டதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. நாளை இந்தியாவிற்கு எதிரான போட்டியில் ஆவது பாகிஸ்தான் பழைய பன்னீர் செல்வமாக வருகிறதா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “