ICC TEST Ranking | ’ஆல்ரவுண்டர் பிரிவில் முதல் இடத்தை பிடித்தார் சர் ரவீந்திர ஜடேஜா’
Ravindra Jadeja Becomes No 1 Is All Rounder Test Ratings
ஐசிசி நேற்று வெளியிட்ட டெஸ்ட் ரேங்கிங்கில், ஆல் ரவுண்டர் பிரிவில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார் சர் ரவீந்திர ஜடேஜா.
காயத்தின் காரணமாக நீண்ட நாட்களாக ஜடேஜாவை சர்வதேச போட்டிகளில் காண முடியாமல் இருந்தது. இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான அணியில் இடம் பிடித்து இருந்த ஜடேஜா முதல் டெஸ்ட் போட்டியில் 175 ரன்கள், ஐந்து விக்கெட்டுக்கள் என்று தனது ஆல்ரவுண்டர் திறமையை காட்டியதன் விளைவு இன்று ஐசிசி தர வரிசையில் ஆல்ரவுண்டர் பிரிவில் நம்பர் 1 என்ற இடத்தை பிடித்து இருக்கிறார்.
“ ஆல்ரவுண்டர் என்பது அணியின் ஒரு முக்கியமான அரியணை ஆகும். அந்த இடத்தின் அரசனாக வீற்று இருக்கிறார் சர் ரவீந்திர ஜடேஜா “