ICC U19 WC 2022 | Final | ‘இங்கிலாந்தை வென்று ஐந்தாவது முறையாக சாம்பியன் ஆனது இந்தியா’
ICC U19 WC 2022 Final India Become A Champion For Fifth Time
ஐசிசியின் 19 வயதினருக்கு உட்பட்டவர்களுக்கான இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வென்று ஐந்தாவது முறையாக சாம்பியன் ஆகி இருக்கிறது இந்தியா.
டாஸ் வென்று பேட்டிங்கை தெரிவு செய்த இங்கிலாந்து அணி 44.5 ஓவர்களில் பத்து விக்கெட்டுக்களையும் இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி சார்பில் ராஜ் பவா 9.5 ஓவர்களில் 31 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். அதற்கு பின் ஆடிய இந்திய அணி 47.4 ஓவர்களிலேயே இலக்கை துரத்திப்பிடித்து ஐந்தாவது முறையாக சாம்பியன் ஆனது.
“ பந்து வீச்சில் 5 விக்கெட்டுக்கள், பேட்ஸ்மேனாக 35 ரன்கள் என்று ஆல்ரவுண்டர் பெர்பாமன்சை காட்டிய ராஜ் பவா, ஆட்ட நாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார் “