ஐசிசி 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பையின் பதினைந்தாவது போட்டியில் அயர்லாந்து அணியை தோற்கடித்து இந்திய அணி காலிறுதிக்குள் நுழைந்து இருக்கிறது.
முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் ஹர்னூர் சிங் 88 ரன்களும், ஆங்கிரிஸ் 79 ரன்களும் எடுத்தனர். அதற்கு பின் ஆடிய அயர்லாந்து அணி 39 ஓவர்களில் 10 விக்கெட்டுக்களையும் இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
“ இந்த வெற்றியின் மூலம் குரூப் பி பிரிவில் இரண்டு போட்டிகளில் இரண்டு வெற்றி என்ற முன்னிலையுடன் முதல் இடத்தில் இருப்பதுடன் காலிறுதிக்கும் முன்னேறி இருக்கிறது நம் இந்திய அணி “