19 வயதினருக்கு உட்பட்ட உலககோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு 290 ரன்கள் இலக்கு வைத்து இருக்கிறது இந்திய அணி.
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்த போதும் கூட அடுத்து களம் இறங்கிய கேப்டன் யாஷ் துல் 110(110) மற்றும் ரஷீத் 94(108) நிலைத்து ஆடி அணியை தூக்கி நிறுத்தினர். அடுத்தடுத்த பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடி ஆஸ்திரேலியாவிற்கு 290 ரன்கள் இலக்கை வைத்தனர்.
“ முக்கியமான ஒரு போட்டியில் கேப்டன் யாஷ் துல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து இருப்பது பாராட்டுதலுக்குரியது. நான்கு பந்துகளில் 2 போர், 2 சிக்சர்களை பறக்க விட்ட தினேஷ் பானா, தோனியை ஒரு நிமிடம் கண்ணுக்குள் கொண்டு வந்து விட்டார் “