ICC U19 WC | QF 2 | ’இரண்டாவது கால் இறுதியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்தியா’
ICC U19 World Cup Quarter Final 2 India Facing Bangladesh
19 வயதினருக்குட்பட்ட உலககோப்பையின் இரண்டாவது கால் இறுதியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்திய அணி.
உகாண்டாவிற்கு எதிராக 326 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் குரூப் பி பிரிவில் ஆறு புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. இது போக காலிறுதிக்கு தகுதி பெற்றதன் மூலம் தனது இரண்டாவது காலிறுதியில் ஜனவரி 29 அன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது நிஷாந்த் சிந்து தலைமையிலான இந்திய அணி.
“ இதுவரை நான்கு முறை U19 உலககோப்பையை வென்று இருக்கும் இந்திய அணி, ஐந்தாவது முறையாக வென்று சாதனை படைக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “