ICC U19 WC | SF 2 | ‘ஆஸ்திரேலியாவை வென்று இறுதிப்போட்டிக்குள் அதிரடியாக நுழைந்து இருக்கிறது இந்தியா’
ஐசிசி 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது இந்திய அணி.
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 290 ரன்கள் எடுத்தனர். கேப்டன் யாஷ் துல் அற்புதமாக விளையாடி 110(110) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 41.5 ஓவர்களில் 194 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
கேப்டன் யாஷ் துல் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பேட்டிங், பவுலிங் என்று இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, வருகின்ற பிப்ரவரி 5 அன்று நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியில் வலுவான இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
“ இதன் மூலம் 96 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வென்று, தொடர்ந்து நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடி எடுத்து வைத்து இருக்கிறது இளம் இந்திய அணி “