ICC WC 2023 | IND v AFG | ‘எட்டு விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா’
ஐச்சி ஒரு நாள் போட்டி உலககோப்பையின் 9 ஆவது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது இந்தியா.
முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணியின் ரோஹிட் ஷர்மா 131(84), விராட் கோஹ்லியின் 55(56) அதிரடியான ஆட்டத்தால் 35 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை மட்டும் இழந்து இந்தியா எளிதாக வெற்றி வாகை சூடியது.
“ சிறப்பாக விளையாடிய ரோஹிட் ஆட்டநாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி 4 புள்ளிகளுடன், நல்ல நெட் ரன்ரேட்டுடன் (+1.500) இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது “