ICC WC 2023 | ‘புதிய கேப்டன்களோடு புது பொலிவுடன் களம் இறங்கும் அணிகள்’
ICC World Cup 2023 Interesting Fact Idamporul
அக்டோபரில் துவங்க இருக்கும் 50 ஓவர் உலக கோப்பை போட்டியில் கடந்த உலக கோப்பையின் போது கேப்டன் பதவியில் வகித்த வீரர்கள் தற்போது எந்த அணியிலும் கேப்டனாக இல்லை என்பது ஒரு சுவாரஸ்யமான தகவல்.
இந்தியாவில் நடக்க இருக்கும் 2023 உலக கோப்பை போட்டியில் ஒவ்வொரு அணியும் புதிய கேப்டன்களோடு களம் இறங்குகிறது. கடந்த உலககோப்பையில் கேப்டனாக இருந்த யாருமே எந்த அணியிலும் தற்போது கேப்டனாக இல்லை என்பது ஒரு சுவாரஸ்யமான தகவல். இதுவரை எந்த உலககோப்பையிலும் இப்படி நிகழ்ந்ததும் இல்லையாம்.
“ இந்திய அணிக்கும் கேப்டன் மாறி இருக்கிறது. ஆனால் அதிலும் ஒரு சிக்கல், வரும் உலக கோப்பையில் கேப்டன்சிப் பொறுப்பை ஹர்திக்கிடம் ஒப்படைப்பதா, இல்லை ரோஹிட்டிடம் ஒப்படைப்பதா என பிசிசிஐ குழப்பத்தில் இருக்கிறதாம், இன்னொரு பக்கம் அணியே குழப்பத்தில் தான் இருக்கிறது என்கின்றனர் கிரிக்கெட் வல்லுநர்கள் “