ICC WC 2023 | Match No 15 | ‘தென் ஆப்பிரிக்காவை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நெதர்லாந்து’
ICC WC 2023 Match No 15 Netherland Beat South Africa By 38 Runs Idamporul
ஐசிசி ஒரு நாள் போட்டி உலககோப்பையின் 15 ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது நெதர்லாந்து.
மழை குறிக்கிட்டதால் போட்டி 43 ஓவர்கள் போட்டியாக மாற்றப்பட்டது. முதலில் ஆடிய நெதர்லாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசையாக சொதப்பினாலும், கேப்டன் எட்வர்ட்ஸ் 78(69), ஆர்யன் தத் 23(9) அவர்களின் அதிரடியால், 43 ஓவர்களுக்கு 245 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி சீரிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறிகொடுத்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
” ஏற்கனவே நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணி, ஆப்கானிஸ்தான் அணியிடம் பல்பு வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தென் ஆப்பிரிக்க அணி, நெதர்லாந்து அணியிடம் பல்பு வாங்கி இருக்கிறது. எந்த அணியாக இருந்தாலும் எளிதாக எடை போட்டால் இப்படிதான் நடக்கும் என்கின்றனர் கிரிக்கெட் வல்லுநர்கள் “