ICC WWC 2022 | Match No 4 | ‘பாகிஸ்தானை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய மகளிர் அணி’
ICCWWC2022 IND W v PAK W India Won By 107 Runs
ஐசிசி மகளிர் உலககோப்பையின் நான்காவது போட்டியில் இந்திய மகளிர் அணி, பாகிஸ்தானை 107 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இருக்கிறது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 43 ஓவர்களில் 137 ரன்கள் எடுத்து பத்து விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியைத் தழுவியது.
“ இந்திய அணியின் ஸ்னேக ரானா பேட்டிங்கில் 53 ரன்கள் பவுலிங்கில் இரண்டு விக்கெட்டுக்கள் என்று தனது ஆல்ரவுண்டர் திறனை காட்டி அணியின் வெற்றிக்கு வித்திட்டார் “