” In The Air, Sreesanth Takes It! India Win The First T20 World Cup “
செப்டம்பர் 24, 2007, இந்தியா – பாகிஸ்தான் டி20 வேர்ல்டு கப் இறுதிப்போட்டி, தோனி தலைமையிலான இளம் அணி, சேவாக் இல்லை, சச்சின் இல்லை, டிராவிட் இல்லை , கங்குலி இல்லை, இந்தய அணி ஒரு சீரிஸ்சில் தோற்றால், அணி வீரர்களின் உருவ பொம்மையை அவரின் வீட்டின் முன்னேயே சென்று, ரசிகர்கள் எரித்து அந்த வீரரை கேவலப்படுத்திக் கொண்டிருந்த காலம். அந்த சூழலில் தான் இந்திய அணியை வழிநடத்த தலைமை தாங்கினார் தோனி.
பரபரப்பான இறுதிப்போட்டி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 155 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதற்கு பின் ஆடிய பாகிஸ்தானுக்கு கடைசி 4 பந்துகளில் 5 ரன்கள் தான் தேவைப்பட்டது. மிஸ்பா உல் ஹக் களத்தில் ஜோஹிந்தர் சர்மா வீசிய பந்தை திரும்பி பேக்சைடில் போர் அடிக்க ஆசைப்பட்டு ” In The Air, Sreesanth Takes It! India Win The First T20 World Cup ” இப்படி நடந்து முடிந்தது.
” அன்று தொடங்கியது தான் தோனி என்னும் கேப்டனின் சகாப்தம், டி20 உலக கோப்பை, ஒரு நாள் போட்டி உலக கோப்பை, சாம்பியன் ட்ராபி கப் என்று இதுவரை எந்த கேப்டனும் செய்திடாத சாதனையை எல்லாம் முடித்து வைத்து விட்டு, தன் கீரிடத்தை இறக்கி வைத்து விட்டு, தற்போது ஐபிஎல்-லில் சென்னைக்கு மட்டும் கேப்டனாக தொடர்ந்து வருகிறார். ”