IND v AUS | 1st ODI | ’5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா’
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.
முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 276 ரன்கள் எடுத்தது. அபாரமாக பந்து வீசிய ஷமி 10 ஓவர்களில் 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். அதற்கு பின் ஆடிய இந்திய அணி ருதுராஜ் 71(77), கில் 74(63), கே எல் ராகுல் 58(63) அதிரடியால் 48.4 ஓவர்களில் இலக்கை எட்டி பிடித்தது.
“ ரோஹிட், ஹர்திக் இல்லாமல் இந்த இந்திய அணி என்ன செய்ய போகிறது என்று கேட்ட அத்துனை பேருக்கும், கே எல் ராகுல் தலைமையிலான இளம் இந்திய அணி வெற்றியை பரிசளித்து வாய்ப்பூட்டு போட்டு இருக்கிறது “