IND v AUS | 3rd ODI | ‘ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்திடும் முனைப்பில் களம் காணும் இந்தியா!’
IND VS AUS 3rd ODI Will India White Washing Australia Idamporul
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. கே எல் ராகுல் தலைமையில் முதல் இரண்டு போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றி இருக்கும் இந்திய அணி, இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் களம் இறங்க இருக்கிறது.
“ ரோஹிட், ஹர்திக் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமல் இளம் இந்திய அணியே ஆஸ்திரேலியாவை புரட்டி போட்டு இருக்கிறது. இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவை இந்திய அணி ஒயிட்வாஷ் செய்யும் பட்சத்தில் அது ஒரு புதிய வரலாற்று சாதனையாக அமையும் “