IND v SL | Day 2 | Stumps | ‘108 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து இலங்கை தவிப்பு’
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ்சை ஆடிய இலங்கை 108 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து தவித்து வருகிறது.
முதலில் ஆடிய இந்திய அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 17 போர்கள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 175 ரன்கள் குவித்தார். அதற்கு பின் ஆடிய இலங்கை அணி 108 ரன்களில் நான்கு விக்கெட்டுக்களை இழந்து தவித்து வருகிறது.
“ 13 ஓவர்கள் வீசி 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தி அஸ்வின் இலங்கை அணியை திணறடித்துக் கொண்டு இருக்கிறார் “