IND v SL | First Test | ‘இன்னிங்ஸ் வெற்றியை ருசித்தது இந்திய அணி’
IND vs SL First Test India Won By Innings
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றியை ருசித்து இருக்கிறது இந்திய அணி.
முதலில் ஆடிய இந்திய அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதற்கு பின் ஆடிய இலங்கை அணி பத்து விக்கெட்டுக்களையும் இழந்து 174 ரன்கள் மட்டுமே எடுத்து பாலோ ஆன் ஆனது. மீண்டும் பேட்டிங்கை தொடர்ந்த இலங்கை அணி, லீட் வைக்க முடியாமல் 178 ரன்களுக்குள் சுருண்டு தோல்வியை தழுவியது.
“ பேட்டிங்கில் 175 ரன்கள், பவுலிங்கில் ஒரு இன்னிங்ஸ்சில் ஐந்து விக்கெட்டுக்கள், இரண்டாவது இன்னிங்ஸ்சில் 4 விக்கெட்டுக்கள் என்று ஆல்ரவுண்டர் திறமையை வெளிக்காட்டி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக நின்ற ஜடேஜா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார் “