IND v WI | 2nd ODI | ‘பிரதீஷ் கிருஷ்ணா வேகத்தில் வீழ்ந்தது மேற்கிந்திய தீவுகள் அணி’
IND v WI ODI 2 India Registered Second Victory In The Series
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகளை வென்று தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து இருக்கிறது இந்தியா.
முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய மேற்கிந்திய தீவுகள் ஒரு பக்கம் ரன்களை சேர்த்தாலும், இன்னொரு பக்கம் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை இழந்து 46 ஓவர்களில் 193 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. அற்புதமாக பந்து வீசிய பிரதீஷ் கிருஷ்ணா ஒன்பது ஓவர்கள் வீசி 12 ரன்கள் மற்றுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியது.
” அணியில் அனைவரையும் பவர் ஹிட்டர்களாக சேர்த்து வைத்து இருப்பதால், ஒருவர் கூட பொறுமையை கடைப்பிடிக்காமல் ஆளுக்கு ஒரு போர், சிக்ஸர் என்று அடித்து விட்டு பெவிலியன் திரும்பி விடுகின்றனர் “