IND vs BAN | 1st ODI | ‘பங்களாதேஷ் அணியிடம் அதிர்ச்சிகரமாக தோல்வியுற்றது இந்தியா’
IND VS BAN 1st ODI Bangladesh Won By 1 Wicket
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகல் இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் அதிர்ச்சிகரமாக தோல்வியுற்று இருக்கிறது இந்தியா.
முதலில் ஆடிய இந்திய அணி பொறுப்பற்று வரிசையாக விக்கெட்டுக்களை இழந்ததன் விளைவு 186 ரன்களுக்குள் 10 விக்கெட்டுக்களையும் இழந்தது. பங்களாதேஷ் தரப்பில் ஷகிப் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். அதற்கு பின் ஆடிய பங்களாதேஷ் அணி 46 ஓவர்களில் இலக்கை அடைந்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
“ ரோஹிட், கோஹ்லி, தவான் என்று தொடக்க ஆட்டக்காரர்கள் நட்சத்திர வீரர்களாக இருந்தும் கூட இந்திய அணியால் 200 ரன்கள் கூட தொட முடியாததும், 136 ரன்களில் 9 விக்கெட்டுக்களை பங்களாதேஷ் இழந்த போதும் கூட ஒரு விக்கெட்டை கைப்பற்ற இந்திய அணியின் பவுலர்கள் தவறியதும் இந்திய அணியின் சரிவை காட்டுகிறது “