IND vs BAN | First Test | Day 1 | ‘முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் குவித்தது இந்தியா’
IND VS BAN First Test Day 1 India Scored 278 Runs In First Day
இந்தியா மற்றும் வங்காள தேசம் அணி இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 278 ரன்கள் குவித்து இருக்கிறது இந்தியா.
முதலில் ஆடிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சொதப்பிய போதும் கூட, புஜாராவும் 90(203), ஸ்ரேயஸ் ஐயரும் 82(169) பொறுமையாக நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தினார். இறுதியாக முதல் நாள் முடிவில் இந்திய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்து இருக்கிறது.
“ தொடர்ந்து கே எல் ராகுல் எல்லா பார்மட்களிலும் சொதப்பி வருகிறார், விராட் 5 மேட்ச்க்கு ஒரு மேட்ச் அடிக்கிறார், இந்திய அணியின் நிலை சற்றே கொஞ்சம் பரிதவிக்கின்ற நிலையில் தான் இருக்கிறது “