IND VS ENG | 2nd T20 | ‘இரண்டாவது வெற்றியை பெற்று தொடரை கைப்பற்றுமா இந்தியா’
IND VS ENG Second T20 Starts Today
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று பிர்மிங்காம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று இருந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி இன்று பிர்மிங்காம் மைதானத்தில் இரவு 7 மணிக்கு துவங்க இருக்கிறது. விராட் கோஹ்லி அணியில் இருக்கிறார். இன்று வெற்றி பெற்று விட்டால் இந்தியா டி20 தொடரை கைப்பற்றி விடும்.
“ விராட் கோஹ்லி வருகின்ற இரண்டு போட்டிகளில் பார்முக்கு வரவில்லையெனில் உலககோப்பை போட்டியில் அவரது இடம் என்பது கேள்விக்குறி தான், எதிரே தீபக் ஹூடா அவர் இடத்தில் நன்றாக விளையாடிக் கொண்டு இருப்பதால் விராட் கோஹ்லி இடத்தில் அவரை உலக கோப்பை அணியில் இணைத்துக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல் கசிந்து வருகிறது “