IND vs ENG | 5th Test | ‘இங்கிலாந்து பந்து வீச்சை நாலா பக்கமும் சிதறடித்த ரிஷப் மற்றும் ஜடேஜா’
IND VS ENG Fifth Test Day 1 India Scored 338 With Sevan Wickets Loss
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா தங்கள் அதிரடியில் இங்கிலாந்தை போட்டு துவைத்தனர்.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் வரிசையாக சொதப்ப, ரிஷப் பண்ட் 146(111) மற்றும் ஜடேஜா 83(163)* நிலைத்து ஆடி சரிவை மீட்டனர். இறுதியாக இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்து இருக்கிறது ஜடேஜா மற்றும் ஷமி களத்தில் இருக்கின்றனர்.
“ ஆட்டம் எப்போதெல்லாம் சிதைகிறதோ அப்போதெல்லாம் ரிஷப் பண்ட் என்னும் இளைஞன் அதை தூக்கி நிறுத்துகிறான். நிச்சயம் இன்னும் பல செய்வான் இந்த பொடியன் நம்புவோம் “