IND vs ENG | 5th Test | Day 4 | ‘வெற்றியை நோக்கி நகருகிறது இங்கிலாந்து’
IND VS ENG 5th Test Day 4 England Moving Towards Big Victory
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஐந்தாவது டெஸ்ட்டின் நான்காவது நாளில் இங்கிலாந்து அதிரடியாக வெற்றியை நோக்கி முன்னேறி கொண்டு இருக்கிறது.
நேற்று நான்காம் நாள் ஆட்டத்தில் இந்தியா 377 ரன்கள் இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்து இருந்தது. மற்ற அணிகளுக்கு என்றால் இது ஒரு கடினமான இலக்கு தான். ஆனால் இது இங்கிலாந்து நேற்றைய ஆட்டத்திலேயே 56 ஓவர்களுக்கு 259 ரன்கள் எடுத்து விட்டது. இன்னும் 119 ரன்கள் தான், ஒரு நாள் வேறு மிச்சம் இருக்கிறது.
“ பேர்ஸ்டோ சொன்னதை செய்து விட்டார், நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் இலக்கு வையுங்கள், நாங்கள் துரத்தி அடிப்போம், என்று தான் சொன்னதை செய்து விட்டார். ஏதாவது மேஜிக் நடந்தாலே ஒழிய இந்தியாவால் ஜெயிக்க வாய்ப்பு இல்லை “