IND vs NZ | 1st T20 | ’21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இந்தியா’
IND VS NZ 1st T20 Newzealand Won By 21 Runs Idamporul
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி இடையிலான முதல் டி20 போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது இந்தியா.
ராஞ்சி சர்வதேச மைதானத்தில் வைத்து நடைபெற்ற முதல் டி20 போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது. அதற்கு பின்னர் ஆடிய இந்திய அணி சீரிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறிகொடுத்து 155 ரன்கள் மட்டுமே எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
“ இந்திய அணியில் ஏகப்பட்ட குறைபாடுகள் இருக்கிறது, எப்போது பிசிசிஐ அதையெல்லாம் களைந்து இந்திய அணியை உலககோப்பைக்கு தயார் படுத்த போகிறது என்று தான் தெரியவில்லை “