IND vs NZ | 2nd ODI | ’8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது இந்தியா’
நியூசிலாந்து எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருக்கிறது இந்தியா.
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் இரண்டாவது போட்டியிலும் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருக்கிறது இந்தியா. இரண்டாவது போட்டியின் வெற்றிக்கு இந்திய பவுலர்களின் அனல் பறக்கும் பந்து வீச்சு முழு காரணமாக அமைந்தது.
“ சிறப்பாக பந்து வீசிய ஷமி 6 ஓவர்கள் வீசி வெறும் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெடுக்களை கைப்பற்றினார். இப்போட்டியில் தாகூர் தவிர்த்து அனைத்து பவுலர்களுமே பவுலிங் எகானமி நான்கிற்கு கீழ் வைத்திருப்பது இன்னும் சிறப்பு “