IND vs NZ | ‘நாளை மூன்றாவது டி20 போட்டி, தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி’
IND VS NZ 3rd T20 Starts Tomorrow Idamporul
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான மூன்றாவது டி20 போட்டி நாளை அகமதாபாத் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.
முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி, இரண்டாவது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி என்னும் போது தொடர் தற்போது 1-1 என்ற சமநிலையில் நிற்கிறது. நாளை தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி அகமதாபாத் சர்வதேச மைதானத்தில் இரவு 7 மணிக்கு துவங்க இருக்கிறது.
“ ஸ்பின்னர்ஸ் ஆதிக்கம் செலுத்துவதால், இரண்டு அணிகளும் அணியில் அதிகமாக ஸ்பின்னர்ஸ்சை உபயோகின்றன. அகமதாபாத் களமாவது அதிரடியாக இருக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “