நியூசிலாந்து அணியை 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது இந்தியா!
IND VS NZ 3rd ODI India Won By 90 Runs Idamporul
மூன்று போட்டிகள் கொண்ட ஒரு தொடரில் நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்து இருக்கிறது இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி.
நேற்று நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று இந்திய அணி, நியூசிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்து இருக்கிறது.
“ மூன்று போட்டிகளிலும் பேட்டிங்கில் அசத்திய சுப்மான் கில் ப்ளேயர் ஆப் தி சீரிஸ் ஆக தேர்ந்து எடுக்கப்பட்டார். ஸ்ரதுல் தாகூர் மூன்றாவது போட்டியின் ஆட்டநாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார் “